--- --:--:-- --

கணவன் கண்முன்னே மனைவியை கடித்த நல்ல பாம்பு..!

10

நாகையில் பாம்பு கடித்து கணவர் கண் முன்னே மலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமருகல் அருகே இருக்கும் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மல்லிகா தம்பதியினர். இவர்கள் நேற்று இரவு வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளனர்.

 

அப்பொழுது அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று மனைவி மல்லிகாவை கடித்துள்ளது. இதன் காரணமாக மல்லிகா வலியால் துடித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் தியாகராஜன் தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

 

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon