--- --:--:-- --

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..!

7

தமிழ்நாட்டில் பல இடங்களில் தொடரும் மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக மழை பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்காவது நாளாக தொடர் கனமழையால் கண்ணமங்கலம் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

 

இதேபோன்று தொடர் மழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon