ஊர்க்காவல் படை வீரர் பெண்ணுக்கு அளித்த பாலியல் தொல்லை..!
தனக்கும் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை அழைத்து வரும் ஊர் காவல் படை வீரர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி பெண் ஒருவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார்.
ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த நிஷாந்தினி என்ற அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் ஐந்து மற்றும் 4 வயது பெண் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். ஊர்காவல்படை வீரரான ஆண்ட்ரூ என்பவர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக உள்ளூர் காவல் நிலையம் முதல் எஸ்பி அலுவலகம் வரை புகார் அளித்திருப்பதாக கூறும் அந்த பெண் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





