--- --:--:-- --

தன் உயிரை தந்து குளத்தில் மூழ்கிய 2 மகள்களை காப்பாற்றிய தாய்..!

5

ஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 2 மகள்களை காப்பாற்றிய பின்னர் தனது உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா. இவர் தன் இரண்டு மகள்களுடன் அங்குள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார்.

 

அப்பொழுது இளையமகள் திடீரென தண்ணீரில் மூழ்கியதால் அவரை காப்பாற்ற மூத்த மகள் சென்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கியுள்ளார். பதறிப்போன ஸ்டெல்லா உடனே குளத்தில் இறங்கி தனது மகள்கள் இரண்டு பேரையும் மீட்டு கரையில் தள்ளியுள்ளார்.

 

ஆனால் அவரால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகள்களுக்காக தாய் தன் உயிரை விட்ட சம்பவம் கிராமத்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Right Menu Icon