மணமகன் கழுத்தில் தாலி கட்டும் மணமகள்..!
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே வரதட்சணை ஏதும் வாங்காமல் ஒரே நாளில் ஒட்டு மொத்த திருமணங்கள் நடைபெற்றது. மணமகள் மணமகன் கழுத்தில் தாலி கட்டுவது செய்யும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீகாகுளம் அருகே உள்ள மீனவ கிராமம் இங்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பு இந்த பகுதியில் குடியேறி இருக்கிறார்கள். இந்த கிராமத்தில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு முகூர்த்த நாள் நிர்ணயிக்கப்படும். அந்த நாளில் திருமணம் நிச்சயக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடைபெறும்.
மணமகளும் மணமகனும் அதே கிராமத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். திருமணத்திற்காக ஊர் முழுவதும் பந்தல் எழுப்பி மின்சார விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் வரதட்சணை எதுவும் வாங்காமல் மணமகன் கழுத்தில் மணமகள் தாலி கட்டுவார்.






