--- --:--:-- --

மனைவி கண் முன்னே கணவர் வெட்டிப் படுகொலை..!

8

திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு தன் குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது டிப்பர் லாரி ஒன்று கார் மீது மோதியது.

 

அதிலிருந்த மர்ம நபர்கள் ஊராட்சி மன்ற தலைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஊர்மக்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.

 

தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

 

Right Menu Icon