கல்குவாரி விபத்தில் தலா 15 லட்சம் நிவாரணம்..!
நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் சிக்கி உயிரிழந்த முருகன் செல்வன் ஆகியோரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா 10 லட்சம் ரூபாயும் தொழிலாளர் நல வாரியம் சார்பில் 5 லட்ச ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட 2 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மூன்றாவது நாளாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் ஆலோசனையின் பேரில் இரண்டு பேரையும் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே பாறையில் சிக்கிய ஐந்தாவது நபர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





