தேர்வு முடியும் வரை மாணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது ..!
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகனை பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க கோரி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முடித்து வைத்து உத்தரவிட்டது.
திருச்சியை சேர்ந்த முத்துமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2022ஆம் ஆண்டு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தனது கணவர் மகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் தற்போது தன் மகன் 12ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில் அவரை கைது செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேர்வு முடியும் வரை மாணவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.





