தமிழகத்தில் சில இடங்களில் பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் பல பகுதிகளில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில்பரவலாக மழை பெய்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மூன்றாவது நாளாக ஒரு சில இடங்களில் மழை பெய்தது.
குறிப்பாக ஓரத்தூர் பெண்ணாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீடித்ததால் வெப்பநிலை தணிந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரையில் நீண்ட நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென கோடை மழை கொட்டியது. மாநகர் பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த கன மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் சில இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.





