ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீர் மழை..!
ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த திடீர் கனமழையால் சாலைகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய பகுதிகளில் மழை கொட்டியது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேகவெடிப்பு போல் மழை கொட்டி தீர்த்ததால் கன மழையில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.





