யாசகம் பெற்ற பணத்தை நன்கொடையாக அளித்த முதியவர்..!
வீதி வீதியாக பிச்சையெடுத்து சேகரித்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை முதியவர் ஒருவர் இளைஞர் தமிழர் உதவி திட்டத்திற்காக நன்கொடையாக அளித்து பாராட்டை பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
கடந்த வாரம் திண்டுக்கல் சென்ற அவர் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கோயில்களில் பிச்சை எடுத்ததில் பத்தாயிரம் ரூபாய் பணம் கிடைத்துள்ளது.
அதை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற அவர் தாம் சேகரித்து வைத்து இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை இலங்கை தமிழர் உதவித்தொகைக்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். உதவித்தொகையாக மதுரை மாவட்ட ஆட்சியருடன் 7 லட்ச ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.






