துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த விபத்து..!
தெலுங்கானா மாநிலம் பாபி ரெட்டி மாவட்டத்தில் பயணிகள் வாகனம் மீது லாரி மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர். கம்பம் மாவட்டத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஒரு வாகனத்தில் நேற்று இரவு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் வாகனம் எதிரே வந்த லாரி மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு ஐந்து பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.






