மகன் தற்கொலை செய்து கொண்டதால் தாய், தந்தை எடுத்த விபரீத முடிவு..!
ராணிபேட்டையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் ஏற்பட்ட தகராறில் தந்தை, தாய் உட்பட 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் பன்னீர்செல்வம் குணசுந்தரி தம்பதியின் மகன் ரமேஷுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக ரமேஷின் மனைவி குழந்தையுடன் சொந்த ஊருக்கு சென்றவுடன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தந்தை மற்றும் தாயுடன் தகராறில் ஈடுபட்ட ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தையும் தாயும் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 3 பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.





