--- --:--:-- --

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பரிதாப மரணம்..!

3

கேரளாவில் சவர்மா சாப்பிட்ட 17 வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் சிறுவத்தூர் நகரில் செயல்பட்டு வரும் ஷவர்மா கடை ஒன்றில் தேவானந்தா என்ற பள்ளி மாணவி அவரது நண்பர்களுடன் சவர்மா சாப்பிட்டுள்ளார்.

 

அதனை தொடர்ந்து மாணவிக்கு உடல் உபாதைகள் ஏற்படவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவ பலனின்றி உயிரிழந்தார். மேலும் 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வு தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டதாகவும் ஷவர்மா தயாரித்தவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon