--- --:--:-- --

வேலைக்கு போக சொல்லிய மனைவியை கொன்ற கணவன்..!

7

வேலைக்கு போக சொல்லிய மனைவியை குடிபோதையில் கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன், தனலட்சுமி தம்பதியர். கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையான தியாகராஜன் வேலைக்கு செல்லாததால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் நேற்று இரவு தனலட்சுமி தனது கணவனை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த கணவன் மது போதையில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்திக் கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்ணகி நகர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Right Menu Icon