--- --:--:-- --

மாணவிக்கு கல்லூரி முதல்வரின் உதவியாளர் பாலியல் தொந்தரவு என புகார்..!

6

நெல்லையில் கல்விக்கட்டணம் செலுத்தாததை சுட்டிக்காட்டி கல்லூரி முதல்வர் தகாத சொற்களால் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். நெல்லையை சேர்ந்த 19 வயது மாணவி துடியலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

 

இந்த நிலையில் கல்லூரி முதல்வரின் உதவியாளர் தன்னிடம் பேசியதாகவும் தொலைபேசி எண்ணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் சக மாணவர்களோடு மாணவி பேசியதை தவறாக சித்தரித்து கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மாணவியை அழைத்து கல்லூரி முதல்வர் கண்டித்துள்ளார்.

 

கல்வி கட்டணம் செலுத்தாததையும் சுட்டிக்காட்டி மாணவியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி கல்லூரியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டி தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கல்லூரி முதல்வர் மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon