--- --:--:-- --

நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்..!

2

பொள்ளாச்சியில் தனியார் உணவகத்தின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து மூன்று லட்சம் ரூபாயை திருடிச் சென்றவனை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

 

மன்னூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி துரைசாமி என்பவர் புதிய திட்ட சாலை பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடன் வாங்கிவிட்டு அதை தனது காருக்குள் வைத்துள்ளார்.

 

பின்னர் அருகே உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்று பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு உணவருந்த சென்று விட்ட நேரத்தில் அவரது கார் அருகே வந்த ஒரு நபர் ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடிச்சென்றார்.

 

ஈஸ்வரன் சாமி கடன் பெறும்போது நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon