நாகசைதன்யாவுக்கு இரண்டாவது கல்யாணாமா..? கோபத்தில் சமந்தா..!
நடிகை சமந்தா விவகாரத்தை அறிவித்தபிறகு அவருக்கு பல புது பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.காதலித்து திருமணம் செய்த நாக சைதன்யாவை திடீரென பிரிந்தது ஏன் என சமந்தா இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நாக சைதன்யாவுக்கு விரைவில் இன்னொரு திருமணம் நடைபெற இருக்கிறது என செய்தி பரவி வருகிறது.
பெண் நடிகையாக இருக்க கூடாது என நாக சைதன்யா கண்டிஷன் போட்டிருப்பதாக செய்தி வெளியானது. இருப்பினும் திருமணம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வரை வரவில்லை. இந்நிலையில் தற்போது சமந்தா ட்விட்டரில் கோபமான ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

“என் மௌனத்தை அறியாமை என நினைக்காதீர்கள், அமைதியாக இருந்தால் ஏற்றுக்கொண்டேன் என எண்ணாதீர்கள். என் அன்பை பலவீனம் என நினைக்காதீர்கள்” என குறிப்பிட்டு உள்ளார்.





