திடீரென பற்றி எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!
திண்டிவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் வெப்பம் காரணமாக திடீரென தீ பற்றி முழுவதும் எரிந்த நிலையில் அருகில் இருந்த இரு சக்கர வாகனம் பற்றி எரிந்து உள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தற்பொழுது சில காலமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி எரிவது தினமும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் திண்டிவனத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





