தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்..!
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் 30-ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழக அரசு மழைநீர் வடிகால் அரசு திட்ட பணிகள் உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகள் பல்வேறு மாவட்டங்களில் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும், துறைரீதியான திட்டங்களையும் ஆய்வு செய்கிறார். இதற்காக வரும் 30ஆம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





