ருத்ராட்சம் அழுத்தி 3 வயது குழந்தை உயிரிழப்பு.!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 வயது குழந்தை கழுத்திலிருந்த ருத்ராட்சம் அழுத்தி பரிதாபமாக உயிரிழந்தது.
ஆக்கலாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோபி பிரியா தம்பதியினரின் மூன்றாவது குழந்தையான முகிலன் உறங்கிக் கொண்டிருந்த பொழுது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம் சுவாசக் குழாயை அழுத்தி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
குழந்தையின் கழுத்தில் ருத்ராட்சம் அழுத்தி உயிரிழந்து இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.





