இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர்..!
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு குஜராத்தில் பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார்.
அரசு முறை பயணமாக இன்று இந்தியா வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேராக குஜராத்தின் அகமதாபாத் நகருக்குச் செல்கிறார். அங்கு விமான நிலையத்தில் இருந்து தங்கும் விடுதி வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு அவரை வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவரை வரவேற்கும் வகையில் நடன குழுக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஐந்து நட்சத்திர விடுதி வரையிலான நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 40 நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவரை வரவேற்க சுமார் 20 ஆயிரம் பேர் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் நகர் வந்தடைந்ததும் போது முதலில் காந்தி ஆசிரமத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். அதன்பின் குஜராத்தின் உயிரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை பார்வையிடுகிறார். பின்னர் காந்திநகர் சென்று கோயிலில் வழிபாடு நடத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





