--- --:--:-- --

டோலி கட்டி பெண்ணை சுமந்த உறவினர்கள்..!

8

சாலை வசதி இல்லாததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக டோல் கட்டி ஐந்து கிலோமீட்டர் தூரம் உறவினர்கள் சுமந்து சென்றனர். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள வெள்ளைக் கல் மலை கிராமத்தை சேர்ந்த சவுந்தர்யா என்ற பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

 

அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக உறவினர்கள் முயன்றனர். ஆனால் மலையடிவாரத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் வர முடியவில்லை. அதனால் டோல் கட்டி சௌந்தர்யாவின் உறவினர்கள் கரடுமுரடான பாதையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து மலையடிவாரத்திற்கு கொண்டு வந்தனர்.

 

பின்னர் வாகனம் மூலம் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சில மாதங்களுக்கு முன் அந்த பகுதியில் துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டதாகவும் ஆனால் மருத்துவர்கள் வருவதில்லை என்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon