--- --:--:-- --

சார்ஜ் போட்டு பணியாற்றியதால் நேர்ந்த விபரீதம்..!

9

ஹைதராபாத்தில் லேப்டாப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு பணியாற்றிய பொழுது திடீரென லேப்டாப் தீப்பற்றி எரிந்ததால் ஐடி ஊழியர் படுகாயமடைந்தார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

 

கொரொனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். லேப்டாப்பில் சார்ஜ் 10 சதவீதத்திற்கும் கீழ் குறைந்ததால் சார்ஜ் போட்டுக் கொண்டே வேலை செய்துள்ளார்.

 

சிறிது நேரத்திற்கு பின் சூடான லேப்டாப் உயர் மின் அழுத்தம் காரணமாக தீ பற்றி எரிந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. 50 சதவீத தீக்காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon