தன்னை கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற பெண்..!
சங்கரன்கோவில் அருகே தன்னைக் கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சங்கரன் கோவிலை சேர்ந்த வேலு என்பவரது தோட்டத்தில் நிலக்கடலை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை கட்டுவிரியன் பாம்பு கடித்ததால் அருகிலிருந்தவர்கள் பாம்பை அடித்து நொறுக்கினார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது இறந்த பாம்பை எடுத்து சென்றுள்ளார். இதை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அது உயிரிழந்த பாம்பு என்பதை அறிந்து நிம்மதி அடைந்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து காப்பாற்றினர்.





