உடுமலை பகுதியில் படையெடுக்கும் விஷப்பாம்புகள்..!
உடுமலை பகுதியில் ஒரே வாரத்தில் 16 விஷ பாம்புகளை பிடித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் சில நாட்களாக கனமழை பெய்து வந்தது.
இதன் காரணமாக பாம்புகள் இடம்பெயர்ந்து வீடுகள், கார்கள் என பல்வேறு இடங்களில் பதுங்கிய நிலையில் அவற்றை வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 14 விஷ பாம்புகளை பிடித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.





