--- --:--:-- --

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

4

மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்று முதல் வரும் 18ஆம் தேதி வரை தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

 

Right Menu Icon