தடையை மீறி பஸ் டே கொண்டாடிய மாணவர்கள்..!
கோவையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பஸ் டே கொண்டாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தடையை மீறி கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாடியுள்ளனர்.
பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்ட பேருந்துகள் தாரை தப்பட்டைகள் முழங்க ஆட்டம் போட்ட மாணவர்கள் அவிநாசி சாலையில் கணியூர் டோல் கேட் அருகே வீடியோ எடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் சூழலில் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





