ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்..!
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் நோக்கி 156 மில்லி மீட்டர் முதல் 204 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வார காலத்திற்கு மேலாக இடுக்கி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் தமிழக கடற்கரையோரத்தில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக இடுக்கியில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோடைகாலத்தில் கனமழை மற்றும் காற்று வேகமாக வீசுவது பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





