ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் மூழ்கிய கல்லூரி பேருந்து..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் கல்லூரி பேருந்தை இயக்கியதால் பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அம்மா பாளையத்திலிருந்து கண்ணமங்கலம் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் சுரங்கப்பாதையில் நீர் இருப்பதை அறியாமல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் இயக்கியுள்ளார். அப்பொழுது பேருந்து தண்ணீரில் மூழ்கி பழுதாகி நின்றது.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மாணவிகளை பத்திரமாக மீட்டனர். அடிக்கடி ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கும் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





