--- --:--:-- --

விமானத்தில் ஸ்மிருதி இராணியுடன் காங். தலைவர் வாக்குவாதம்..!

5

விமானத்தில் எரிபொருள் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும் காங்கிரஸ் மகளிரணி தலைவிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

அசாம் மாநிலம் தௌகாத்திக்கு வந்த பயணிகள் விமானத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. காங்கிரஸ் மகளிர் அணி தலைவியும் பயணித்துள்ளனர். விமானம் தரையிறங்கும் போது ஸ்மிருதி இராணியை வழிமறித்த அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் .

 

அதற்கு இலவச தடுப்பூசி மற்றும் ஏழைகளுக்கு வழங்கும் நலத்திட்டங்களை காரணம் காட்டி மத்திய அமைச்சர் நலுவ பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். விமானத்தில் இரு பெண் அரசியல் தலைமைகளும் நடந்துகொண்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

 

Right Menu Icon