--- --:--:-- --

தமிழகத்தை வாட்டி வதைக்கும் வெயில்..!

7

மிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் கோடை வெப்பம் கொதித்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

அதன்படி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. பெரியகொள்ளப்பட்டி, சடையம்பட்டி, லட்சுமியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

 

கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று காலை மழை பெய்தது.

 

Right Menu Icon