பட்டாக்கத்தியுடன் நள்ளிரவில் சுற்றிய இளைஞர்..!
காரைக்காலில் நள்ளிரவில் கத்தியுடன் சுற்றிய இளைஞரை மடக்கி பிடித்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காரைக்கால் கடல் பகுதியில் போலீஸ் ரோந்தின் பொழுது அந்த பகுதியில் ஒரு இளைஞர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்து உள்ளார்.
அவரை பிடிக்க முயற்சித்தபோது தப்ப முயன்று இருக்கிறார், அவரை பிடித்து காவல்துறையினர் சோதனை செய்த போது அவரிடம் பட்டாக்கத்தி இருந்துள்ளது. தொடர்ந்து போலீசாரிடம் சிக்கிய நபர் விவேக் என்பதும் அவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.






