--- --:--:-- --

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..!

6

மிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தேவகோட்டை மற்றும் ராமேஸ்வரத்தில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon