கைலாசாவில் இருந்தபடி சித்திரை திருவிழாவில் கலந்துகொண்ட நித்யானந்தா..!
உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழாவில் கைலாசா நாட்டில் இருந்து நேரலை மூலமாக நித்தியானந்தா கலந்துகொண்டார். அப்பொழுது நித்யானந்தா ஆசிரமத்தில் பிரசாதத்தை வாங்க பொது மக்கள் முன் சென்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் நாள்தோறும் காலை மாலை ஆகிய இருவேளையும் மீனாட்சியம்மன், சிவகாமியும் உள்ளிட்டவை பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சித்திரைத் திருவிழாவில் நித்தியானந்தா கலந்து கொள்ளும் விதமாக அவரது சீடர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி வீடியோ காலிலேயே வந்த நித்தியானந்தா திருவிழாவை கண்டு களித்தார், மேலும் அவரது ஆசிரமத்தில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி சென்றனர்.






