--- --:--:-- --

மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு..!

1

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி இருவர் உயிரிழந்தனர். செல்லத்துரை, ராமர் மற்றும்வெங்கடேஷ் ஆகிய 3 பேர் மலைப்பாதை அருகே மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிது நேரம் மழை பெய்துள்ளது.

 

அப்பொழுது மழைக்கு இடையே பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் தாக்கியுள்ளது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வெங்கடேஷ் என்பவர் காயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் வெங்கடேசனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon