தலை சிதறி இறந்து கிடந்த வளர்ப்பு நாய்..!
கிருஷ்ணகிரி அருகே பேட்டரி தொழிற்சாலையில் வளர்ப்பு நாய் தலை சிதறி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்ணு குட்டை கிராமத்தில் பிரபு டேவிட் என்பவருக்கு சொந்தமான அந்த ஆலையில் அவரது வளர்ப்பு நாய் தலை சிதறி உயிரிழந்தது.
இதுகுறித்து போலீசார் புகார் தெரிவித்து நிலத்தகராறில் பக்கத்து இட உரிமையாளர் தனது நாயின் உணவில் வெடி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்ததாக புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






