ஆதார் கார்டில் வித்தியாசமாக பெயர் போடப்பட்டதால் அதிர்ச்சி..!
உத்திரபிரதேச மாநிலம் அரசுப் பள்ளிகளில் குழந்தையின் பெயரை காரணம் காட்டி குழந்தையை சேர்க்க மறுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஆதார் அட்டையில் குழந்தையின் பெயர் பேபி 5 ஆஃப் மது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆதார் அட்டையில் குழந்தையின் பெயர் இடம்பெற வேண்டிய இடத்தில் மதுவின் ஐந்தாவது குழந்தை என அச்சடிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் கிராமத்தில் வசிக்கும் தினேஷ் தனது மகள் ஆர்த்தியை ஆரம்பப் பள்ளியில் சேர்க்க சென்ற பொழுது குழந்தையின் ஆதார் அட்டையில் உள்ள பெயரைக் கண்டு அந்த பள்ளி ஆசிரியர் குழந்தையை சேர்க்க மறுத்ததாக தெரிகிறது.
அட்டையை சரி செய்யுமாறு ஆசிரியர் தினேஷிடம் கூறி அனுப்பியுள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் கூறுகையில் அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் வங்கிகளில் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. வங்கிகளில் உள்ள அதிகாரிகள் எச்சரித்து அலட்சியத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.






