--- --:--:-- --

கஞ்சா சப்ளை செய்த காவலர் பணியிடை நீக்கம்..!

1

வியாபாரிகளுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

அவர்களிடம் விசாரித்ததில் கோவையில் ஆயுதப்படை காவலர் ஆக பணிபுரியும் கணேஷ்குமார் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்தது .அறந்தாங்கியில் இருந்து கோவைக்கு வந்த காவலர்கள் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள கணேஷ் குமாரின் வீட்டை சோதனையிட்டனர்.

 

அப்போது வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் சில பொருட்களை கைப்பற்றியவுடன் கணேஷ்குமாரை கைது செய்து புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.

 

கணேஷ்குமார் கைது செய்திருப்பது தொடர்பான ஆவணங்களை கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் குமாரிடம் புதுக்கோட்டை மாவட்ட காவலர்கள் வழங்கினார். எனவே ஆயுதப்படை காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon