--- --:--:-- --

பாம்புகளை பிடிக்க இருளர்களுக்கு அனுமதி..!

8

ருளர் இன மக்கள் பாம்புகளை பிடிப்பதற்கு அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் பாம்புகளை பிடிக்கும் இருந்த மக்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதால் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

 

இதனால் பாம்புகளை பிடிப்பதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டுமென இருளர் இன மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.

 

அதில் இருளர் இன மக்கள் பாம்புகளை பிடிப்பதற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விஷ முறிவு மருந்து உற்பத்தி செய்யப்படுவதால் இருளர் இன மக்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் ஆகிய பாம்புகள் விஷ முறிவு மருந்து தயாரிக்கப் போவதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon