கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட +1 மாணவி..!
திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த பதினோராம் வகுப்பு மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டு இருக்கும் நிலையில் கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சண்முகம் என்பவரின் மகள் உடுமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவியின் தாயார் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் பின்புற வாசலில் மக்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மாணவி இறந்துவிட்டதாக அரசு மருத்துவனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






