--- --:--:-- --

காதல் திருமணம் செய்த மருத்துவ மாணவியின் கணவருக்கு கொலை மிரட்டல்..!

5

தென்காசி அருகே காதல் திருமணம் செய்த மருத்துவ மாணவியின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு அவரின் தந்தை மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்.

 

இவர் அதே பகுதியை சேர்ந்த மருத்துவ மாணவி பிரியங்காவை காதலித்து வந்தார். இருவரும் ஒரே சமூகத்தினர் என்றபோதிலும் இவர்கள் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

 

இதனால் கோபமடைந்த பெண் வீட்டார் அடிக்கடி தாக்கி வந்ததோடு அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அதேநேரம் சுபாஷின் தந்தை முருகனையும் அவர்கள் தாக்கியதால் அச்சமடைந்த தம்பதியர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

 

Right Menu Icon