திருவிழாவில் கதகளி நடனம் ஆடிய மாவட்ட ஆட்சியர்..!
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியர் கதகளி ஆடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வள்ளியூர் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற திருவிழா நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் கதகளி நடனம் இடம்பெற்றது.
நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய ஆட்சியர் கல்லூரி காலம் முதலே கதகளி நடனத்தில் ஆர்வம் இருப்பதாகவும், தற்பொழுது நிகழ்ச்சியில் கதகளி ஆடும் நடனம் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது எனவும் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






