கொரோனா காலர் டியூன்க்கு எண்டா..!
கொரொனா பெருந்தொற்று குறைந்ததால் காலர் டியூன் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரொனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செல்போன் அழைப்புக்கு முன் விழிப்புணர்வை கேட்ட பின்பே மக்கள் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் வருகிற 31-ஆம் தேதி முதல் காலர் டியூன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி செல்போன் அழைப்புக்கு முன் ஒலிக்கின்றன விழிப்புணர்வு முடிவுக்கு வரலாம் என தெரிகிறது.






