யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்பு..!
உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 450 தொகுதிகளில் பாஜக 255 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் உத்தரபிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற உத்திரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக தொடர்ந்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் இன்று பதவியேற்கவுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





