பள்ளி மாணவனை ரகசிய திருமணம் செய்த ஆசிரியை..!
17 வயது பள்ளி மாணவனை அழைத்து சென்று திருமணம் செய்த பள்ளி ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
துறையூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் கடந்த ஐந்தாம் தேதி திடீரென மாயமானது குறித்து மாணவனின் பெற்றோர் துறையூர் போலீசில் மகனை காணவில்லை எனவும் ஆசிரியர் மீது சந்தேகம் உள்ளதாகவும் புகாரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
ஆசிரியை தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்ததையடுத்து ஆசிரியையை கைது செய்த போலீசார் மாணவரை மீட்டனர்.தஞ்சை பெரிய கோவிலில் ரகசிய திருமணம் செய்ததும் தெரியவந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





