பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபலம் தீனா !
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து BB அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மேலும் இந்த BB அல்டிமேட் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இடையே எதிர்பார்த்தளவு வரவேற்பை பெறவில்லை.
அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல் விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது.
இதனிடையே தற்போது BB அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர் ஒருவர் நுழைந்துள்ளார். ஆம் அவர் வேறுயாரும் இல்லை KPY உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் டிவி பிரபலம் தீனா தான்.





