--- --:--:-- --

ஒவ்வொரு துளி நீரையும் சேமிக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர்..!

1

க்கள் ஒவ்வொரு துளி தண்ணீரையும் சேமிக்க உறுதியேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலக தண்ணீர் தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் கிடைக்க ஜல்ஜீவன் மிஷன் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப் போவதாகவும் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

தண்ணீரை வீணடிக்காமல் முறையாக பயன்படுத்த கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெரிய இயக்கமாக உருவாகி இருப்பதாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்காக பாடுபடும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Right Menu Icon