--- --:--:-- --

பொய்யாக பாலியல் புகார் கொடுக்க ஐடியா கொடுத்த சாமியார்..!

5

கல்பாக்கம் அருகே 17 வயது சிறுமியை செல்போனில் பேச வைத்த ஊர் முக்கியஸ்தர்கள் மீது பொய்யான பாலியல் புகார் கூறிய நாடகமாடிய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

 

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த பெருமாள் சிறு கிராமத்தை சேர்ந்த பாமக பிரமுகர் தினேஷ், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது 17 வயது சிறுமி புகார் தெரிவித்து வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.

 

மூன்று பேரும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தன்னை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவதாக மிரட்டிய அந்த சிறுமி கண்ணீருடன் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

 

செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி அரவிந்தன் சதுரங்கம் பட்டி காவல் நிலையத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அந்த சிறுமி முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அந்தச் சிறுமியின் குடும்பத்தினர் தங்கியிருந்த ஆசிரமத்தில் சாமியார் வடிவேலுவிடம் அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

ஆசிரமத்தை காலி செய்ய ஊர் முக்கியஸ்தர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் அவர்களை பழிவாங்க சாமியார் வடிவேலு சிறுமியை பேசவைத்த பொய்யான பாலியல் புகார் என்பது தெரிய வந்தது. எனவே, சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon