--- --:--:-- --

இளைஞருக்கு போன் செய்து ஏமாற்றிய பெண்..!

2

நாகர்கோவிலில் கஞ்சா வாங்க தங்கையை செல்போனில் இளைஞனிடம் பேச வைத்து ஏமாற்றி வரவழைத்து தாக்கி நகை பறித்த அண்ணனையும், கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

சில தினங்களுக்கு முன் அந்த ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை இரவில் செல்போனில் தொடர்புகொண்ட பெண் தான் தனது நண்பனின் தங்கை என்றும் நல்லூரில் விபத்தில் சிக்கி உள்ளதாகவும் அழுதவாறே கூறினார்.

 

பதறிப்போய் விஷ்ணு சென்று பார்த்தபோது சுற்றிவளைத்த 9 பேர் கடுமையாக தாக்கி நகை, செல்போன் இரு சக்கர வாகனத்தையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

 

இதுகுறித்து போலீசில் புகார் அளித்த விஷ்ணுவின் உறவினர்கள் போனில் பேசிய பெண்ணை விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரின் ஒப்புதல் வீடியோ வைரலான நிலையில் கஞ்சா கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon